சொல்லடா என்காதலா

ரொம்ப நாளாச்சு
நான் உன்னைப்பார்த்து
விழிவைத்து காத்திரு
எனக்காக வாசலைப்பார்த்து

பேருந்தில் பயணம்
செய்யும் பொழுதெல்லாம்மரணம்
உன்னை பார்க்கும்தருணம்
அடிப்பேனடா குட்டிக்கரணம்

வாடைக்காத்து வீசுறப்ப
வாசமெல்லாம் உன்வாசம்
உன்னைப்பார்க்க வாரேன்னு
எழுப்புதடா பெருங்கோசம்

பேருந்தின் வேகத்தில்
மனமெல்லாம் மகிழ்ச்சி
ஆசைகாட்டி ஏமாற்றுவது
காலன்செய்யும் சூழ்ச்சி

ஆறு நாட்கள்
காக்கமுடிந்த என்னால்
ஆறுமணிநேரம் காக்க
முடியவில்லை என்றால்

அது காதலா
இல்லை
அதுதான் காதலா
சொல்லடா என்காதலா !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (22-Dec-17, 11:25 am)
பார்வை : 251

மேலே