யார், யார், யார் அவர் யாரோ ----- தமிழ் இலக்கியம்
யார் சொன்னார்? எதில் சொன்னார்?
1.கோபத்திலே நாடியிலே அதிர்ச்சியுண்டாம்
அச்சத்தால் நாடியெல்லாம் அவிந்துபோகும்
கவலையால் நாடியெல்லாம் தழலாய் வேகும்
2.எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே
3.கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப்போக
4.ஆணெல்லாம் காதலை விட்டுத் தவறு செய்தால்
அப்போது பெண்மையும் கற்பழிந்திடாதோ?
5.மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
6.சொல்லிலும் இலாபம் கொள்வர்
7.வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
8.என்று நீ அன்று நான் உன்னடிமை
குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு குமரன்
தன்னைச் சிவமென்றறிந்தவனே அறிந்தான்; தூயதாகிய
நெஞ்சுடையவர்க்குத்தாமே சிவமாய்த்தோன்றுமன்றே
11.வடமொழியைப் பாணிணிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை, உல்கமெலாம் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்
இம்மென்னுமுன்னே எழுநூறும் எண்ணூறும்
அம்மெனவே ஆயிரம் பாட்டாகாதோ
கவலயற்றிருத்தலே முத்தி
முத்தமிழடைவினை முற்படுகிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்
திருப்பிலே யிருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை
16.எழுதாத மறையளித்த எழுத்தறியும் பெருமாள்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
பேசுவது மானம் இடைபேணுவது காமம்
தேவர் குறளும் திருநான்மறைமுடிவும்
மூவர் தமிழும் திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகமென்றுணர்
திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்
ANSWERS
1சுப்ரமண்ய பாரதி, 2. தாயுமானவர், 3. இராமலிங்க சுவாமிகள் (வள்ளலார்), 4. சுப்ரமண்ய பாரதி, 5. இராமலிங்க சுவாமிகள் (வள்ளலார்), 6. சிவஞான முனிவர் (காஞ்சிபுராணம்- வணிகர்), 7. திரிகூட ராசப்ப கவிராயர், திருக்குற்றாலக் குறவஞ்சி, 8.தாயுமானவர், 9.குமரகுருபர சுவாமிகள், 10.சிவப்பிரகாச சுவாமிகள், 11.பரஞ்சோதி முனிவர், திருவிளையாடல் புராணம், 12.காளமேகப் புலவர், 13. சுப்ரமண்ய பாரதி,14.திருப்புகழ், அருணகிரி நாதர், 15.வரந்தருவார், வில்லிபாரதம், 16.சேக்கிழார், பெரியபுராணம், 17. மூதுரை, அவ்வையார், 18.கம்பன், கிட்கிந்தா காண்டம், 19. மூதுரை, அவ்வையார், 20. கந்த புராணம், கச்சியப்ப சிவாசாரியார்
லண்டன் ஸ்வாமிநாதன்