ஓடி வா என் பைங்கிளியே

தூங்கும் இரவில் உடல் துடிக்கும் குளிரில்
மாறாமல் வருவது உன் மதி முகம்
விடியும் காலை வேளை தன்னில்
விழிக்கும் கண்ணில் காண்பதுன் ஒளி முகம்
மனதின் காயம் தீர்க்கும் கானமாய்
மௌனம் நடுவே உன் மொழிகள் பேசும்
மழை போல் வந்து சோகம் போக்கும்
நெஞ்சம் தணியும் எனக்கு நிம்மதி கனியும்
என் கனவுகள் யாவிலும் நான் காண்பது
விண்மீன் நடுவே ஒளிரும் உன் நிலா முகம்
மலர்கள் நடுவே கண்கள் குவியும் ஒற்றை மலராய்
பெண்கள் நடுவே தனியாய்க் காணும் என் பூமகளே
இன்று நீ எங்கு சென்றாய் ?
உனைக் காணாமல் தவிக்குது என் இள மனம்
ஓடோடி வா என் பைங்கிளியே
ஆக்கம்
அஷ்ரப் அலி