துணிந்திட நினைக்க வானமும் எட்டும்
தடைகளைத் தாண்டி நாம் படையினில் சேர்ந்தோம்
தடைகளைத் தகர்த்து பெரும் வெற்றி காண்போம்
வா வா நண்பா நம் கைகளைக் கோர்ப்போம்
குளிர்ந்த காற்றை நம் துணை சேர்ப்போம்
இந்திய நாடு அது போட்டது சோறு
எதிர்ப்பது யாரு அவன் ஓட்டத்தைப் பாரு
வெற்றி என்பது நம் பாரதச் சொத்து
பறித்திட நினைத்தால் பலம் கொண்டு மொத்து
மண்ணைக் காக்கவே பிறந்தோம் நாம்
கண்ணைக் கவர்ந்திட விடுவோமா
நம்மை விட்டு உயிர் பிரிந்தாலும்
எதிரி ஜெயித்திட முடியாதே
பலம் கொண்ட நெஞ்சம் இருக்கும் வரைக்கும்
குண்டுகள் என்ன.. பீரங்கியும் நடுங்கும்
புஜபலம் இல்லை மனபலம் ஜெயிக்கும்
வண்டுகள் போல.. எதிர்ப்படை பறக்கும் (இந்திய நாடு)
உன்னையும் என்னையும் தந்திட்ட தேசம்
போகவே விடுவோமா வனவாசம்
மண்ணைத் தாயாய் வணங்கிடும் நாமே
துள்ளும் எதிரியை அடக்கிடுவோம்
வீரம் என்பேர் வெற்றி உன் பேர்
நாம் கைசேர.. எதிரியும் சிதற
தூரமே இல்லை.. பக்கமே கிட்டும்
துணிந்திட நினைக்க வானமும் எட்டும் (இந்திய நாடு)