பூமுங்கில்
நீ சிணுங்கும் அழகோ என் கண்ணில்
நீ சிந்தும் புன்னகையோ என் தோளில்!!!
செல்லும் இடமெல்லாம் வழித்துணையாக வந்தேன்
சரி என்று சொன்னால் வாழ்க்கை துணையாக வருவேன்
ஒரு வார்த்தை சொல்லடி
கம்பன் உனை கண்டிருந்தால்
கணக்கில்லாமல் எழுதிருப்பான்
பல கவிதையை !!
பிரம்மன் எனை படம்பிடிக்க
படைத்திருக்கான் நீ காட்டும்
கண்ஜாடையை !!
நட்டபிலிருந்து காதலை அழகாக கடத்துகிறேன்
காற்றுக்கும் முத்தமிட்டு அரவணைத்து பேசுகிறேன்
ஒரு வாரத்தை சொல்லடி !!!!!
முதற்முதல் இருவரும் கண்டநொடி
எந்தன் வருமென்று கொண்டேன்
என் பூமுங்கில் !!
தினம்தினம் உந்தன் முகம்
பார்க்கும் சுகமொன்றுண்டோ
இப்பூவுலகில் !!!
கைப்பேசியில் கைதாகி பலநேரம் பேசிருப்போம்
கைவிரல்கள் கோர்த்திருந்தே கடலழகை பார்த்திருப்போம் !!
ஒரு வார்த்தை சொல்லடி
-கிருஷ் அரி