சட்டம் யார் கையில்
பாமர வழியில் வந்தவன்
வசதியான வாழ்கை வாழ
தவறான வழியில் தலைமுறைக்கு சேர்க்கிறான்
நம்மால் நமக்காக
அரியாசனம் அடைந்தவன்
காகித காதல் கொண்டு
செல்வம் சேர்க்கிறான்
அரியாசனம் ஏற்றியவன் வயிறு எரிகிறது
எம்மால் என்ன செய்ய முடியும்
சட்டம் பார்த்து சிரிக்கிறது
நம் நாட்டில் நம் எண்ணங்களை
பதிக்க அனுமதியிருந்தும்
மனம் மறுக்கிறது
பயம் எட்டி பார்க்கிறது
சட்டம் சரிந்து
கடலில் கலந்து
கல்லறையில் அடைந்து
காகித கையில் சட்டம் உள்ளது
வலிமை உள்ளவர்களிடம் வளைந்து கொடுப்பதும்
எளியவர் மீது ஏவப்படுவதுமே இன்றைய சட்டம்