புத்தாண்டு இனிதாய் மலரட்டும்

துன்பம் வறுமை பகைமை நீங்கி
இன்பம் செல்வம் தோழமை எல்லாம்
இனிதாய் நயமாய் நமக்குக் கிடைக்கட்டும்
மறந்து போன சொந்தம் சேரட்டும்
மனைவி பிள்ளை பந்தம் கூடட்டும்
ஏழை வாழ்வில் வசந்தம் பெருகட்டும்
தீண்டாமை ஒழியட்டும் சமத்துவம் வளரட்டும்
கசந்தவை யாவும் கடந்து செல்ல இனிக்
காண்பவை யாவும் வளமாய் அமையட்டும்
புதிய ஆண்டு 2018 ல் உங்கள் வாழ்வு
மகிழ்வாய் மனநிறைவாய் அமைய
இறைவன் துணையும் உம்மைச் சேரட்டும்
உங்கள் யாவருக்கும் என்னிதயம் கனிந்த
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (31-Dec-17, 6:29 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 294

மேலே