கண்ணீர் துளி

என்னவளே!
என் கன்னத்தில் வடிந்த
கண்ணீர் துளிகள்
இதழ் மீது விழுந்தது...
கண்ணீர் துளிகள் கூட
இனிப்பாகத்தான் இருந்தது...
ஆம்!
அந்தக் கண்ணீர்த் துளிகள்
உன் நினைவால்
வடிந்தது அல்லவா....!

எழுதியவர் : கவிதை ரசிகன் (3-Jan-18, 12:13 pm)
Tanglish : kanneer thuli
பார்வை : 377

மேலே