துயர் கொடுத்த கயலொருத்தி

கிழக்குவரும் கதிரொளி அறிந்திருக்கக்கூடும் என்கதையை
கிழபருவம் உதிக்கும்முன் நெறிமுறையை மறைத்துவிடுகிறேன்...

முதிர்பருவம் முனைதொட்ட முப்பதுவயதில் தொடங்கியகாதல்
எதிர்பாரா வினைசூழ அப்பொழுதே முடங்கிப்போனது...

நுளைகொண்ட சிறுதேரையும்
துளைநுழைய வயல்தேடும்
கிளைபடரும் சிறுவேர்கள் இளைப்பாற்ற வியப்பூட்டும்...

கதிரொளி புலரும்முன் அவள்கரம் பற்றிடநினைத்தேன்
மதியவள் மலர்முகத்தை உரக்கிடங்கில் ஒளித்துவைத்தாள்...!

துளிவிழும் விழிநீர் தரும்வலி உணராநெஞ்சம்
உளிகாணா கழுமரமாய்  உயர்ந்துநின்று என்னபயன்...?

கிளையொடிக்க காத்திருந்த கடும்புயல் இடியுடன் கரையேற
விளைகதிர் பூத்திருந்து விடுத்தசாபம் கொடிச்சிர நரைசொல்லும்...

பருவமாளும் உருவச்சிலை பழிசுமந்த
மருந்தாய்எனை மாற்றாதிருந்தால்
விருந்துபுசிக்கும் துருவமுனையில் வழிதுறந்த கருமேகத்திடம் தோற்றாபோயிருப்பேன்...?

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (4-Jan-18, 10:57 pm)
பார்வை : 195

மேலே