பிச்சையெடுக்க விட்டவன்

தும்பிக் கையினை நம்பிநல்ல
துணிச்சல் கொண்ட யானையது
வம்பே யின்றி சுதந்திரமாய்
வலமாய் வந்ததைப் பிடித்தேதான்,
தந்த மதனின் வலிமையையும்
தானே மறக்கப் பழக்கியதைச்
சொந்த நலனில் இரந்திடவே
செய்து விட்டான் மனிதனவனே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Jan-18, 7:34 am)
பார்வை : 62

மேலே