இறைவன்
கலியுகத்தில் அர்ச்சாவதாரம் எடுத்து
சிற்பி செதுக்கிய கற்சிலைகளில்
உறைகின்றாய், கோயில் கர்பகிரஹங்களில்
அங்குவந்து பல்லாயிரம் பக்தர்களுக்கு
காட்சிதந்து உள்ளதால் பூஜித்து வாயால்
உன் நாமங்கள் பாடி அற்சிப்போருக்கு
அவர்தம் உள்ளங்களை திறந்து அங்கு
இசைந்து நீயே குடிபுகுந்து அவர்கள்
அகக்கண்களைத் திறந்து வேண்டும்
ரூபம்கொண்டு இனிய காட்சியும் தருகின்றாய்
பரம்பொருள் உனக்கு உருவேதுமுண்டா யாரறிவார்
ஆணென்றால் புருடோத்தமன் நீ
பெண்ணென்றால் ஆதிசக்தி நீ
அருவத்தில் நீ ஆயிரம்கோடி ஆதவன் பேரொளி
நீதான் தேவதேவன் நீ இல்லாது
உலகங்கள் ஏதுமிலை உயிரேதுமில்லை
தன்னை உணர்ந்தார் உன்னை உணர்வார்
உணராதார் அஃதொன்றும் அறியாதார்