கனமழை

ஆளுமை முறையின்மை
அபகரிப்பு அளவின்மை
பிளக்கிறது மேகம்
மிதக்கிறது தமிழகம்
Pure Veg வீட்டில் பூச்சியும் மீனும்
Non Veg வீட்டில் தவளையும் பாம்பும்
இரவு முழுவதும் Android. விளக்குகள்
மழையாண்டு விடுமுறையால்
விடுதியாய் பள்ளிகள்
அகதிகளாய் மக்கள்

வீடு நிறைய தண்ணீர் குடிக்க முடியாமல்

புளிசாதமும், லெமன் சாதமும்
விண்ணிலிருந்து விழுந்த அதிசயம்
மனிதநேயம்
உண்டெனக்காட்டிய மக்கள்
அதே விலையில் மதுபானம்
அதிரடி விலையில் பால்

மீண்டும் வராதவரை
மழைக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்

எழுத்து
ஜெகன். G

எழுதியவர் : ஜெகன் G (10-Jan-18, 10:57 am)
பார்வை : 168

மேலே