வாக்கு விற்கும் மூடர்கள்

அஞ்சுக்கும் பத்துக்கும் அதிகாரத்தை விற்றுவிட்டு
அடிமை வேலை பார்க்கிறார்கள்.
......பணத்துக்கு வாக்கை விற்கும் மூடர்கள்.

விருந்தாய்க் கிடைத்த உணவை விற்ற பணத்தில்
பசியை வாங்கிக்கொண்டு மகிழ்கிறார்கள்
......பணத்துக்கு வாக்கை விற்கும் மூடர்கள்.

விதை நெல்லை விற்றுத் தின்று விட்டு
விதைக்கும் நெல்லுக்குப் பிச்சையெடுக்கிறார்கள்
......பணத்துக்கு வாக்கை விற்கும் மூடர்கள்.

வேலைக்காரனிடம் வீட்டுச் சாவியைக் கொடுத்துவிட்டு
வாசற்படியில் அனுமதிக்குக் காத்திருக்கிறார்கள்
......பணத்துக்கு வாக்கை விற்கும் மூடர்கள்.

எழுதியவர் : kokilamakan (13-Jan-18, 11:41 pm)
சேர்த்தது : kokila makan
பார்வை : 137

மேலே