ஆசை
கற்க ஆசை,
காரணம் நான்!
களம் வென்றது.
பழக ஆசை,
காரணம் நான்!
காலம் வென்றது.
வாழ ஆசை,
காரணம் நான்!
சமுதாயம் வென்றது.
மனிதனாக ஆசை,
காரணம் நான்!
பணம் வென்றது.
இறுதியாக,
என்னை வெல்ல ஆசை,
காரணம் நான்!
நான் தோற்றது.
தோற்றது வாழ்வில் மட்டும் அல்ல,
என்னிலும்....