அப்பா

உன் சுகங்களை மறந்தாய்
உன் சுமைகளை மறைத்தாய்
உன் இயலாமைகளை இல்லாதழித்தாய்
உன் முதுமையிலும் முடியாதென்று
நீ சாெல்லக் கேட்டதில்லை
ஒட்டி ஒடுங்கி பலமிழந்து பாேனாலும்
இன்னும் என்ன குறை விட்டேனாே என்று
விழிகசியும் உன் கண்கள்
மறைவாக அழுது விட்டு
நிறைவாய் நீ சிரிப்பாய்
அப்பா
ஈன்ற தாய்க்கு ஈடாக
நீயும் ஓர் தியாகி தானே.

எழுதியவர் : அபி றாெஸ்னி (24-Jan-18, 10:41 am)
Tanglish : appa
பார்வை : 80

மேலே