கனவின் மொழிபெயர்பாளன்

ஆசைக்கும் தேவைக்குமிடையே...

கனவினை,
சொற்களாக மொழிபெயர்த்து,
ஆடையென நெய்தவன்,
சூன்ய பிரதேசத்தில்-
பிரவேசித்த பொழுது...

சுற்றிதிரியும் நிர்வாண கன்னியருள்,
யாருக்கு பொருந்துகிறதோ,
அவளுக்குரியது இக்கவிதை...
அவள் உனக்குரியவள்...
அசரீரியின் அறிவிப்பின் பின்,

எதிர்ப்பட்டவருக்கெல்லாம்,
உடுத்திப் பார்த்தான்,
சிறிதும் பெரிதுமாய்,
பொருந்தாதிருக்க....

ஏற்கனவே ஆடையுடுத்தியவளுக்கு,
பொருந்தி போனதைக் கண்டு ...
சூன்யத்தை சபித்த கணத்தில்...

எல்லாருக்கும் பொருந்தி போனது கண்டு...
தன்னைத்தானே சபித்துக் கொண்டான்....
தொடர்ந்து நெய்து கொண்டேயிருப்பதாக...
தொடர் நிகழ்வை.... தொடரும் கனவு ...

எழுதியவர் : ரமண பாரதி (3-Aug-11, 10:43 pm)
பார்வை : 343

மேலே