காதல்- காதல் மயக்கத்தில் ஒரு கிறுக்கனின் பிதற்றல்

பைங்கிளியவள் பேசும் மொழி
கொஞ்சி கொஞ்சி பேசும் கிளியின்
கிள்ளை மொழி
பட்டு பட்டு வண்ண நிலா அவள்
என் மனத்தைக் குளிர வைக்கும்
பால் நிலா தண்ணிலா

நீலா வானில் தாரகையோ அவள்
சிமிட்டுகிறாள் தாமரை கண்ணிரண்டை
வானவில் போல் அவள் காட்டுகிறாள்
அங்கங்களில் மிளிரும் எழில்கள் அத்தனையும்

வில்லொத்த புருவங்கள் நெளிந்தும் வளைந்தும்
அவள் உள்ளத்தின் உவகைகள் அத்தனையும்
அபிநயமாய் ஆடி காட்ட -கூறிய குறும்பு
பார்வைக் கொட்டி என் உள்ளத்தில் காதல்
பதித்து விட்டாள், என்னை மிக மயக்கிவிட்டாள்

மீண்டும் என்னவள் இவள்தான் என்று நினைத்தவளை
என்னுள்ளம் பார்க்க தோன்றியபோது
கண்களின் பார்வைக்கு கிட்டாமல்
மறைந்து போனதில் மாயமறியேனே





வானத்தில் நிறைந்துவழியும் தாரகைகள்
ஆயிரம் ஆயிரம் இருந்தாலும் -துருவம்
போல் தாரகை இருப்பதோ ஒன்றே ஒன்றுதான்
நீலவானில் வெள்ளி விளக்கைப்போல் அது
மின்மினித்துவடக்கு திசைக் காட்டியாய்
அமைந்தது போல , திசை தடுமாறி அலைந்த
என் மனதிற்கு துருவ தாரகையாய் வந்தமைவாள்
என்னவளாய் இவளென்று , என்னை வாழவைக்கும்
மங்கள காதல் தேவதை இவள்தான் என்று , மீண்டும்
என் முன்னே தோன்றிடுவாள் என்னை
இவனே நான் தேடும் தேவமகனென்று என்
கை பிடித்து இன்பலோகம் தேடி பறந்துசெல்வாள்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Jan-18, 7:20 am)
பார்வை : 141

மேலே