மண்
காற்றடைத்த மேகத்தில்
காலில்லாத பூதமே
விண்ணுக்குச் சகோதரனாய்
படர்ந்து இருக்கும் பூதமே
மக்காத சிலையையும் மயங்க
வைக்கும் மண்ணிணமே
வேராய் படர்ந்து நிற்க புவியில்
புவிமாந்தர்கு அடிமையானது எப்பொழுதோ?
பூதமாய் குணம்படைத்த மனிதனுக்கு
மண்பூதமே இன்று அடிமை
உன்னை சுரண்டி பார்க்க நினைத்தவனுக்கு
சொர்க்கத்தையும் காட்டினாய், எதுவரை?
அவன் உன் நேச உறவுகளை வெட்டும்வரை
சரியும் நிலங்களும் ஊரும் வெள்ளப்பெருக்கும்
உன் கோபத்தின் உச்சமே
நின்று பார்க்க நேரமின்றி
தவித்த மனிதன்
தவறை உணர மறந்தான்
மண்ணாசை மூழ்வதற்குள்
மண்ணில் மக்கி மண்ணாணான்