இறைவி
அழகோ!
இவள் அழகோ!!
பொழுதோ -இது
மாலைப் பொழுதோ?
பொழுதோ -இல்லை
காதற் பொழுதோ?
கண்களாக நீ இருந்தால்
இமைகளாகி -உன்னைக்
காத்திடுவேன்!!!
கூந்தல் வெற்றிடம்
நீயானால்,
நறுமண மலராய்
மாறிடுவேன்!!!
உன் சேலை நுனியை,
உரசிடவே;
காலணியாகி நான்
கிடப்பேன்!!!!
பக்கம் நீயும்
வந்துவிட்டால் ,தானாய்
பற்றி நான் எரிந்தேன்!!!
தூரம் --------
விலகி நீ நடக்க;
மதியும் ,மனதும்
நான் இழந்தேன்!!!!
அழகோ இவள்
அழகோ?
எழிலோ "இறைவி"க்கு
ஏன் இத்தனை எழிலோ?!