தடையை உடைப்பான் தமிழன்
ஒரு போதும் இழந்திடாதே
உனது நம்பிக்கையை
யாருக்கும் விட்டுக்கொடுக்காதே
உனக்கான உரிமையை!
எத்தனை முறை வீழ்ந்தாலும்
கைகொடுத்து தூக்கிவிடும்
நம்பிக்கை மட்டும்தான்
அதனை எப்போதும்
மறந்திடாதே நீதான்...!
வேதனையைக் கண்டு பயந்தால்
நாளை வாழ முடியாது
சோதனையை சந்திக்காமல்
சாதிக்க முடியாது
நினைத்த இலக்குகளை
தொட்டிட நீ நினைத்தால்
உடனே துணிந்து எழுந்திடு
தினம் போராடி தோற்றாலும்
அனுபவம் பெற்றிடு...!
உன் வலிமை தெரியாமல்
முடியாதென்றுஒதுங்காதே
இருப்பதை உணராமல்
இல்லையென்று கூறாதே
ஒருமுறையேனும் முயலாமல்
இயலாதென்று சொல்லாதே
அடிமேல் அடிவைத்து
படிப்படியாய் கடந்திடு
உன் நெஞ்சை நிமிர்த்தி
தடைகளை உடைத்திடு...!
நீ வெறும் தீ அல்ல
நீயொரு எரிமலைடா
தமிழனை நெருங்கிட
யாருக்கும் திறமில்லடா
ஜல்லிக்கட்டு காளையை
எல்லாரும் அடக்கிட முடியுமா?
காட்டு தீயினை
மார்கழி பனிதான்
அணைத்திட முடியுமா?