கண்ணீர்
சுக துக்கங்களின் எல்லைக்காேடு
சின்னச் சின்ன வலிகளின் வடிவம்
ஆற்றாத காயங்களின் அளவுகாேல்
ஆனந்தத்தின் ஆர்ப்பாட்டம்
அழிக்க முடியா நினைவுகளின் நெருடல்
மறக்க முடியா ரணங்களி்ன் மாதிரி
மூளைக்கும் இதயத்துக்கும் இடையே
முட்டி மாேதும் எண்ணங்களின் எதிராெலி
கசப்பான கணங்களின் நினைவுகள் மட்டுமன்றி
தித்திக்கும் இரகசியங்களின் இனிமைப் பாெழுதுகள்
பிரிவின் வலிகளை புரட்டி பார்க்கும்
தனிமையின் தவிப்பு
நினைவாேடு பாேராடும் நிமிசங்களை மீட்கும்
இமைப்பாெழுதின் இயலாமை
கண்ணீர்