மனைவியின் மனநிலை
வீட்டிற்குவர தாமதமாச்சு
வீதிகூட இருண்டுபோச்சு
வாசல்பாத்து நிக்காதன்னு
வாடைகாத்து சொல்லியிருச்சு
உடல்மட்டும் இங்கவைச்சேன்
உசுருபூரா அங்கவைச்சேன்
யார்யார்கிட்டயோ சொல்லிவைச்சேன்
எங்கயும்இல்லன்னு சேதிகேட்டேன்
வேலையிலகொஞ்சம் அசந்திருப்பாரோ
காசில்லன்னு நெனச்சுருப்பாரோ
பசியிலமயங்கி விழுந்திருப்பாரோ
பஸ்இல்லன்னு நடந்துவருவாரோ
என்னன்னு சொல்லுறது
ஏதுன்னு சொல்லுறது
காருபஸ்எல்லாம் போகுது
கணவன்மட்டும் காணலையே
தூரத்துல ஒருஉருவம்
உத்துப்பாத்தா என்பாதிரூபம்
ஓடிப்போயி கட்டியணைச்சேன்
தாமதம்ஏன்னு கேட்டழுதேன் !...