காதல்
ஓவியன் வரைந்த சித்திரத்தில்
அவள் அழகிய சித்திரப்பாவை
சிற்பி செதுக்கிய கற்சிலையில்
அவள் அழகிய சிலைதான்
சித்திர பாவை பேசவில்லை
அழகிய கற்சிலையும் பேசவில்லை
கவிதை வரிகளில் என் காதலியை
கவிதையாய் எழுதிவைத்தேன்
அந்த கவிதைக்கு ஒருவர் 'மெட்டமைக்க'
'கவிதையின் 'காதலி' பாடலானாள்
இப்போது 'அவள்'குரல் கேட்டேன்,
திரையில் இப்போது பார்க்கின்றேன்
என் 'கவிதைக் காதலி' .உயிருடன்
ஆடுகிறாள் , என் கவிதையைப் பாடி
என் காதல் கவிதை வெறும் கவிதையல்ல
அதில் நான் வரைந்த காதலி
பாடுகிறாள், ஆடுகிறாள் உயிரோவியமாய்
உயிர்கொண்ட கவிதை ஆகிறது அரங்கில்.