இப்படியும் ஒரு மனிதன்

அழகிருந்து அத்துடன்
அன்பும் பண்பும் கலந்திருக்க
இன்னும் அவளிடம் நீ
எதிர்பார்ப்பது என்னவோ
நண்பா, அவளை நீ ஏற்றுக்கொள்
உன்னவளாய் மணம்புரிய
என்று நண்பனுக்கு நான் சொல்ல
அவனோ தயங்கி தயங்கி
மென்னு விழுங்கி சொன்னான்.
'நண்பா, தானம் இல்லையே' என்றான்
வெறுத்துப்போய் , நான் சொன்னேன்
'நீ மணக்க வேண்டியது பெண்ணை அல்ல
ஒரு 'கல்லா' பெட்டியை',,
பெண்ணை அல்ல , என்று கூறி ,
விருட்டென்று அவனை மீண்டும்
திரும்பி பார்க்காமல் வந்துவிட்டேன்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-vasudeva (2-Feb-18, 3:57 am)
பார்வை : 112

மேலே