மகன்களை சமைப்பது எப்படி

மகன்களை சமைப்பது எப்படி

சகோதரி ப்ரிம்யா அவங்களோட ஒரு பதிவு இயற்கையா வெளியில் போகும் பெண்களுக்கு நேரும்
சமூக பிறழ்வுகளை அழகா சொல்லிருந்தாங்க

அவங்க கடைசி வரியில, ஒரு நல்ல கேள்வி அவங்களையே கேட்டுக்கிட்டாங்க, ஆனா அந்த கேள்வி
பைய்யனை பெற்றிருக்கும் எல்லோருக்குமான கேள்வி என்றுதான் சொல்லணும்

"மகன்களை சமைப்பது எப்படி"

அந்த கேள்வியைப்பார்த்ததும் எனக்கு சட்டுன்னு நினைவுக்கு வந்தது ஒரே ஒரு நபர் தான்

நான் பார்த்தவரை எல்லோரும் அவரவர்கள் ஆண் பிள்ளைகளை, அவர்களுடைய சக்திக்கேற்றபடி
எல்லாமே செய்து, நல்ல புத்திமதிகள் சொல்லி குறையில்லாமல் வளர்த்தி வருகிறார்கள் தான்

ஆனா,, சகோதரி ப்ரிம்யா அவர்களின் கேள்வி, இவற்றையெல்லாம் தாண்டி ஏதோ சொல்லணும்னு யோசிக்கவெச்சப்போ, அடுத்த நொடி என் நினைவுக்கு வந்தாள், அவளைப்பத்தி அவள் இங்க அதிகம் பகிர்ந்திருக்க மாட்டா, அவளைப்பத்தி தெரிஞ்சவங்க மிகச்சிலர்தான் இங்க, அவள் அவளைப்பத்தி அதிகம்
யாரோடும் அளவளாவிட மாட்டா, அவளோட கஷ்டங்களையும்,

சிறு விஷயங்களையே பெருமைப்படுத்தி சொல்லிக்கொள்ளும் பலருக்கு முன்னாலும், தன்னை சார்ந்த அனைவருக்கும் அன்பை அமைதியாக புகட்டத் தெரிந்திருக்கிறாள், இவளிடம் நான் கற்ற சில வாழ்க்கைப்பாடங்களை இங்கே பகிறுகிறேன்,

நாங்க அறிமுகமாகி ரொம்பநாளாகியும் அவ அவளோட வாழ்க்கையின் எந்த ஒரு சங்கடங்களைப்பத்தியும் சொல்லமாட்டா, காரணம் யாருகிட்டயும் இதை மறைக்கணும்னு
சொல்லாம இல்லை, அவளைப்பொறுத்தவரை, அவளைச்சுற்றிய கடினங்களை அவளே
முடிந்தவரை சமாளிக்கணும் என்கிற அந்த பக்குவத்துக்கு அவ வந்து, பலாக்காலங்கள்
ஆகியிருக்கலாம்
ஆம்

ஷோபனா, நான் மதிப்பும், மரியாதையும் , நேசமும் வைத்திருக்கும் வெகுச்சிலரில் நீயும் சசியும், ஆனா சசிக்கு ஒரு பொண்ணு , அழகான வாழ்வியல் சூழல் அவளுக்கு,

அதனால "மகன்களை சமைப்பது எப்படி" என்கிற இந்த கேள்விக்கு, உன்னோட வாழ்க்கைதான் சரியான பதிலா இருக்கமுடியும்னு நம்பறேன், ஈவன் என்னோட பைய்யனோட வளர்ப்புக்கும் அடிக்கடி, உன்கிட்ட நான் ஆலோசனை கேட்டிருப்பேன்

உன் வீட்டுக்கு வந்த அன்னைக்குத்தான் நான் ஆச்சர்யப்பட்டு போயிருந்த நிமிடங்கள் நிறைய

ஆனா, இத்தனைக்காலம் நாம பேசியும் பழகியும் நீ எங்க எல்லோருடனும் சந்தோஷங்களை மட்டும்தான்
பகிர்ந்திருக்கிறாய்

நாம நேரில் சந்திக்கும்போதுதான் உன்னை எனக்கு சரியாக புலப்படுத்தவேண்டும் என்பது
யாருடைய கட்டளை? விதியுடைய கட்டளையா?? ,, இருக்கலாம்

உங்க எல்லோரையும் பார்த்துட்டு ஒரு காப்பி, டீ குடிச்சிட்டு சீக்கிரம் ஹோட்டல் போயி கொஞ்சம் தூங்கிட்டு, அப்பறம் இரவு பஸ் ல கோயமுத்தூருக்கு கிளம்பிடலாம்னு தான் நினைச்சதும், வந்ததும்

ஆனால் அன்றைய தினம், நொடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணிக்கணக்காகி, நான் பேருந்துக்காக புறப்படும் சற்று நேரத்துக்கு முன்புவரையும் என்னை அங்கேயே இருத்தியது

அந்த அழகான சின்ன வீட்டுக்குள்ள, உன்னுடைய எல்லா உணர்வுகளையும் கட்டிப்போட்டிருந்தாய்,
ஒரு ஆள், முழுதாக தன் கால்களை நீட்டி உறங்க முடியாத, அந்த குருவிக்கூடு, தேவாம்சத்தை நிறைத்திருந்தது, உன் எண்ணங்களைப்போலவே உன் வீட்டை விசாலமாக்கி வைத்திருந்தாய்
ஒரு கதைப்புத்தகத்தையும், ஒரு கவிதைப்புத்தகத்தையும் போறப்போ எடுத்துட்டுப்போடான்னு
சொல்லிருந்த, உன் வீட்டிற்குள் நுழையும்வரை உண்டாகியிருந்த அயர்ச்சி, அதன் பின்னால்
சென்றது எங்கே என மறந்திருந்தேன்

பொட்டிடப்பட்டு செவுற்றில் தொங்கிக்கொண்டிருந்த அவருடைய போட்டோ, இளமை கண்டிருந்த இரண்டு மகன்கள் மணி, யஷ்வந்த்

மணிக்கணக்கில் நாம் பேசும்போதெல்லாம் யூகித்துணர்ந்திருக்கிறேன், உன்னோட சந்தோஷங்களும், வார்த்தைகளுக்குமிடையே ஒரு கனமான காரணம் இருக்குமென்று

வாழ்க்கைச்சுழலை, உன் கைகளுக்குள் இறுக அடைத்துவைத்திருக்கிறாய்

இன்றுவரையும் போராடிக்கொண்டிருக்கிறாய்

தங்கள் வீட்டுநிலை அறியாதே, ஆசைகளுக்குள், தேவைகளுக்குள் தங்களை ஆழ்த்தியிருக்கும், நான் பார்த்த இன்றைய தலைமுறைகளை கண்டு, விசனப்பட்டுவிட்டு

உன் வீட்டில் ஒரு தகர நாற்காலியில் இருந்துவிட்டு எழுந்துபோக மனசே வராதபடி, அவர்கள் இவருடைய பரிமாற்றம் என்னை வியக்கவே செய்தது

நான் வந்து ஒரு அரை மணி நேரத்தில், அம்மாவும் எழுந்து போய்ட்டாங்க

மணி யின் அப்பா போட்டோவை பார்க்கிறேன்,
மணிக்கு ஏழு வயசு, சின்னவனுக்கு நாலு வயசு இருக்கும்போ, தவறிட்டாருன்னு, நீ சொன்னபோது,
நிறைய கனவுகளோடு உன் வாழ்க்கையை தொடங்கலாம் என்றிருந்த உனக்கு, அந்த கனவுகளை
கொடுத்து உடனே திரும்ப பறித்திருந்தான் காலன். கானலில், கால் தடம் வைத்துதான், இழந்த கனவு தேடினாய் போல், காதல் திருமணம், பூக்களைப்போல் ஆளுமைச்செய்யும் அன்பான காதல் கணவன், குழந்தைகள் என்று எத்தனை அழகாய் வாழ்ந்திருப்பாய், அவரோட இறப்புக்கு அப்பறம், என்ன செய்ய ன்னு யோசிச்சு உக்காந்திராம, அழுது முடிந்த ஈரம், காற்றில் காயும் முன்னமே, அவருடைய உன் பிள்ளைகளின் மேலுள்ள கனவுகளை, நிறைவேற்றப் புறப்பட்டுவிட்டாய், எங்கு முடியும் என்று தெரியாமலேயே அந்த பயணம் தொடங்கியிருந்தாய்,, மணி ஓட அப்பா, அவங்க ரெண்டு பேருக்கும் செய்ய நினைத்த எல்லாத்தையும் இன்னைக்கு நீ உன் சக்திக்குள்ள என்ன முடியுமோ அதை செஞ்சிக்கிட்டிருக்க,Woman of the world என்று, யாரோ, யார் யாரையோ சொல்லிக்கொண்டிருக்கும்போது, என்னைப்பொறுத்தவரை என் கண்களுக்கு அது நீயாகத்தான் தெரிகிறாய்

ஷண்முகம் சாரோட மறைவு, உன்னை மிகையாக அழவைத்தது என்றாய், என்னையும்தான் ஏன்
நம் நண்பர்கள் அனைவரையும்தான் அழவைத்து சென்றார், அந்த அழுகை அவருக்கானது அல்ல
அது சந்தியாவின் அதற்குப்பின்னான நிலையை நாம் அனைவரும் நினைத்ததிற்க்கானது ஷோபனா
உன்னை பார்ததுக்கப்பறம், நேற்றுவரை இருந்த அந்த பாரம் கண்ணிற்குத் தெரியாத தூரம்வரை
காணாமலேயே தொலைந்து போயிருந்தது

இத்தனைக்காலம், இழந்தவர்களுக்கென, ஆறுதல் சொல்லுவதாய் நினைத்து அழுது, நீ ஆறுதல் தேடியிருப்பாய்... எல்லாமே தொலைக்கலாம், உனக்காக நாங்கள் எல்லோரும்

பசங்க ஆசைப்பட்டு கேட்பதை வாங்கிக்கொடுக்க முடியாத வருத்தம் இங்க எத்தனைப்பேருக்கு இருக்கும்னு தெரியல, ஆனா, அக்கம்பக்கத்துக் குழந்தைகளை, பார்த்துவிட்டு உன்னால அந்த
எதையும் வாங்கிக்கொடுக்க முடியாத ஒரு நிலையில், இல்லை என்று நீ சொல்லும் முன்னமே,
எதுவும் வேண்டாம் ம்மா என்னும் பக்குவத்தை, மாரத்தான்போல உறக்கமற்ற உன் தொடரோட்டம்
விளக்கிக் கொடுத்திருக்கும் அவன்களுக்கு

என்னை சாப்பிடவாச்சு, பஸ்ஸுக்கு லேட் ஆச்சு ன்னு சொல்லி கிளம்பும்போது, அந்நேரத்தில் என்னோடு சேர்ந்து நடந்தவளாக, வெளியே ரோட்டுக்கு வந்து என்னை ஆட்டோவில் ஏற்றிவிட்டு, நான் போயிக்கிறேன் நீ போ என்று நான் எவ்வளவு சொல்லியும் கேக்காம, டாட்டா சொன்னபடி நீ அங்கேயே கொஞ்சநேரம் நின்னுக்கிட்டிருந்த, ஆனா உன் பார்வை மறைஞ்சதுக்கப்புறம் எனக்குள்ள தொடங்கிய
பலக்கேள்விகளையும் தாண்டி நீ எனக்குள் மேலேறிக்கொண்டிருந்தாய்

இன்னைக்குவரைக்கும் கால் பண்ணி பேசும்போது, வேலையில தான் மூழ்கி இருக்க நீ

நான் கூட சொல்லியிருப்பேன், உன்கிட்ட
நீயும், மணியோட அப்பாவும், மெல்லிய குணங்களைக் கொண்டவங்களா இருக்கும்போது
பசங்களும் அதே , இருப்பதில் தவறில்லை, ஆனா, சில குடும்பங்களில் அப்பா சரியில்லை என்றாலே, அவருடைய ஒத்த குணம் ஏதோ ஒரு பைய்யனுக்கு தொத்தியிருக்கும், அப்போ என்ன செய்வாங்க ன்னு
சொன்னப்போ, உன்னுடைய பதில் விசித்திரம்

அந்த மாதிரி இருந்தா, என்ன செய்ய தூக்கி வீசவா முடியும், இல்லை என்கிற பதிலும், தான் சந்தித்த, சந்தித்துகொண்டிருக்கும் இடர்களை,சொல்லிக்காண்பித்தும் தான் வளர்த்திருப்பேன்

அப்பா இருக்கிற வீடுன்னா, அவங்க எவ்வளவு கஷ்டங்களை சந்திச்சாலும், தங்களுடைய மனைவி மக்களுக்கானதை செயதே தீருவார்கள்,, ஆனால் ஒரு கட்டத்திற்குமேல் அதையும் சொல்லி சொல்லியே தான் வளர்க்கவேண்டியது இன்றியமையாமை, வாழ்க்கையின் கடினங்களைக் கண்டு குழந்தைகள்
அம்மா, அப்பா என்ன பண்றீங்க என்று நம்மை கேட்க தொடங்குகிற நொடி முதலே, அவர்களுக்கு நிலாக்கதையை சொல்லிவிடாமல், நம் வாழ்க்கையை கதையாக்கி சொல்லத் துவங்குதல், சிறப்பு, ஏன்னா வாழ்க்கை நம்மை எல்லா கட்டங்களிலும் சிறப்பாக வாழச்செய்வதில்லை

அவர்களுக்குத் தெரியும், சிறு வயதிலேயே கணவனை இழந்துவிட்டு எத்தனை எத்தனையோ இன்னல்களுடன் போராடிக்கொண்டிருக்கும் அம்மாவை, பிள்ளைகளின் உச்சபட்ச கோபத்தின் எல்லைகளால் அவளை சூழ்நிலை அரக்கர்களிடம் இரையாக்கிட மாட்டார்கள் என்று.

அப்போதே தன் தவறை உணருவார்கள், என்று

மேலே சொன்ன இத்தனையும்,
அன்று உன்னை கண்டு திரும்பிய பின்னால், நம்மிருவரிடையே இன்றுவரையான
உரையாடல்களில் நீ சொன்னவைகளின் சொச்சம் தான் ஷோபனா

உன் குணத்தின், நடத்தையின் மூலம், அவர்களுக்கு நல்ல நண்பர்களை கிடைக்கச்செய்திருக்கிறாய், பெண்களுடன் மரியாதை நிமித்தமாக பேசிப்பழக கற்றுக்கொடுத்திருக்கிறாய்
படித்துக்கொண்டே வேலை செய்யவும் என இப்படியெல்லாம் இத்தனைக்காலம், எதையும் பேசாமலேயே
உன் கடினங்களால், உழைப்பினால், புரிதலின் ரத்தத்தை,அவர்களுடைய நரம்புகளோடு, ஊசி ஏற்றிருக்கிறாய்

எனக்குத் தெரிந்த, எல்லா எழுத்தர்களையுமே சப்தமில்லாமல் ஆதாரமில்லாமல் சந்தித்து அவர்களிடமிருந்து பரிசுப்பெற்று கடந்தவன் நான், இதெதையுமே பீற்றிக்கொள்ளத் தெரியாத
எனக்கு, உன்னை யாரென்றுத் தெரியாதவர்களிடம், உன்னைத் தெரியும் என்று பீற்றிக்கொள்வதில்
ஏனோ எனக்கு பெருமிதமே தோன்றுகிறது ஷோபனா..

பாராட்டலை எரும - எப்போவுமே நினச்சு பெருமைப்படவேண்டியதைவிட பாராட்டு என்ன அவ்ளோ பெருசா ம்ம்ம்

நன்றி - அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (2-Feb-18, 4:07 am)
பார்வை : 80

மேலே