வா இங்கு தென்றலே

வா இங்கு தென்றலே
இதுதான் வாசல் வா...
வாடை நீக்கிய சோலை
இவன்மீது நீயுமே
வீசிடும் வேளையில்
காதினில் ஓதுவேன் ஞானம்
ஞானம் இழந்த நானும்
கேட்பாயோ நீயே...

மங்கை வடிவிலொரு
மானும் பிறந்ததென்று
மானை அடைந்துவிட
மனமும் அலைந்ததன்று

வேட்டையாளனையே விழுங்கி
ஏப்பம் விட் டு
ஓட்டம் போட்டதென்ன
காட்டை எரித்துவிட்டு

எனக்குள் இருக்கும் எண்ணம்
இதயம் பிசையுதடி
கணக்கை முடித்து விட
கண்ணீர் கசியுதடி

விதியோ? வீணோ?

வேண்டாத தெருவோரம்
தீண்டாத பூவாரம்
இவனோ? இவனோ?

ஏக்கம் பெருகி வந்து
எந்தன் உயிரைத் தாக்கும்
சாக்கில் விழுந்த கண்ணீர்
சத்தம் எங்கு கேட்கும்

பூக்கும் பூக்கள் எல்லாம்
வாசம் இழந்து பூக்கும்
வாசம் தனைக் கேட்டு
சுவாசம் பறிக்கப் பார்க்கும்

விடிய பிரியும் நெஞ்சில்
வீணை மீட்டி விடு
முடிய போகும் கதை
தொடரும் எழுத விடு

சகியோ?சதியோ?

நஞ்சுக்கும் அஞ்சாத
நெஞ்சம்தான் தாங்காதோ
வஞ்சம்! வஞ்சம்!

எழுதியவர் : விமுகா (3-Feb-18, 3:58 pm)
சேர்த்தது : விமுகா
Tanglish : vaa ingu thentralae
பார்வை : 128

மேலே