அன்பு மகளுக்கு

ஒரு கூட்டு கிளியான
நீயும் ஊர் மாறி போனாய்
காணாத உன் முகம் தேடி நானும் வாட
காலமும் உருண்டோட
கண் முன் உன்னை காண
காற்றோடு கலந்த ஒரு பயணம்!

கண்ணின் மணியாக கண் முன்னே
என் உயிர் கண்டேன் அன்பு மகளே
உன் நெற்றி முத்தம் தொடுகையில்
என் கண்ணீர் கன்னம் வருடுதே!

குமரியாக உருவம் மாறி போனாலும்
கை குழந்தையாகவே நானும் காண்கிறேன்
தோள் சாய்ந்த அன்பு மகளே
காலம் நூறு நீ வாழ்கவே!
✍️Samsu✍️

எழுதியவர் : Samsu (6-Feb-18, 11:30 am)
Tanglish : anbu magalukku
பார்வை : 114

மேலே