தோழியின் அம்மாவின் மரணம்

தாயே என் தலைகோரும்
உன் விரல் ஸ்பரிசம்
நான் எங்கு உணர்வேன் !

பேசி கொண்டிருக்கையில்
தலை சாய்ந்து கொண்டாய்
துகில் கொள்கிறாய் என நாங்கள்
எண்ணிக்கொண்டிருக்க !

எங்களின் எண்ணம் சிதைத்து
எங்களை சிந்தை மீளா துயர் கொள்ள
செய்து விட்டு போனாயே தாயே !

என் மடி வைத்து
நானும் உந்தன் தலைகோரி விடுகிறேன்
அசைவற்ற உடலாக நீ அம்மா !
I miss you Amma 😭😭😭

எழுதியவர் : Samsu (6-Feb-18, 11:27 am)
பார்வை : 353

மேலே