காதல்

மலர் மலர்ந்து மணம் கொண்டு
எனைப் பார்த்து புன்னகைத்ததோ
அந்த சிவந்த சுகுந்த ரோசாப்பூ !
உன்முகத்தில் ஏன் இந்த சோகம்
புன்னகை ஏதுமில்லை என்று
சொல்வதுபோல் எனக்கு தெரிந்ததேனோ!
வண்ண வண்ண வண்ணத்துப் பூச்சி
அழகிய தன் சின்ன சின்ன இறக்கைகள்
கொண்டு மலர்கள் தேடி அங்கும் இங்கும்
பறப்பதேன்? தேனுண்டு களித்து மகிழ்ந்திட
என்று சொல்வதுபோல் இருந்ததேன்?
சோலைக் குயில் கூவி கூவிஇசைப்பதேன்
அந்த இசையில் யாரை மயக்கிட கூவுதோ
இன்னும் கூட்டில் உறங்கிடும் தன் பேடையை
தன்னுடன் சேர்ந்திடத்தான் இந்த இசைப் பாடுதோ?
பச்சைக்கிளி ரெண்டு மாமரத்துக் கிளையில்
மாங்கனியைக் கொத்தி கொத்தி பகிர்ந்து உண்டு
உண்டுகளித்தப் பின் ஜோடியாய் எங்கோ
பறந்து போனதேனோ ........ புரிந்தது புரிந்தது
அது காதல் ஜோடி கிளி என்று.................

என்னவனே என் தனிமை உனக்கு இன்னும் புரியலையா
விரைந்து வந்திடு என்னை நாடி நாம் கூடி
காதல் ஜோடியாய் ஓடியாடி களித்து உறவாட
அந்த அலர்ந்த சுகந்த ரோசாப்பூவின் 'சிரிப்பு. முகம் போல
வண்ணத்துப் பூச்சியின் குன்றா சுறுசுறுப்பாக
ஜோடிக்கிளியின் பொங்கும் காதல் புணர
தன் பேடையைத் தேடி கீதம் இசைத்து அழைக்கும்
குயிலாய் நான் உன்னையே நினைந்து பாடுகின்றேன்
இன்னும் அதை நீ கேட்கவில்லையா .....................
ஓ, ஓ, உள்ளத்திற்குள் நான் பாடும் கீதம்
உன் செவிகளில் இன்னும் சேரவில்லையோ,
வா, வா, என் மன்னவனே இன்னும் தனிமையில்
என்னை தவிக்க விடாதே , இந்த தனிமை
என்னை வதைத்திடுமோ என்று அஞ்சுகிறேன் நான்,
இன்னும் தாமதம் ஏன் எந்தனுயிர்க் காதலனே ,
வருவாய் விரைந்து என்னை அடைவாய் என் மாளிகைக்குள் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Feb-18, 10:13 am)
Tanglish : kaadhal
பார்வை : 194

மேலே