பினு -ன்னு பேரு வைடா

ஏன்டா முத்து உனக்கு மூக்குடைப்புங்கற பட்டத்த யாருடா குடுத்தது?
😊😊😊😊😊
பாட்டிம்மா எங்கப்பன் பேரச் சொல்லு?
😊😊😊😊😊
உங்கப்பன் பேரே உனக்கு மறந்து போச்சா?
😊😊😊😊
இல்ல பாட்டிம்மா. எங்கப்பன் பேர பட்டத்தோட நீ சொல்லணும்.
😊😊😊😊😊
அவம் பேரு வெரலக்கடிப்பான் வேங்கையன்.
😊😊😊😊😊
எங்கப்பன் வழிப்பறிக் கொள்ளையடிக்கு ஆளாகறவன் ஒரு வெரலையாவது கடிக்காம. வரமாட்டான்னு நீதானே சொன்ன.
😊😊😊😊
ஆமாம்டா முத்து..
😊😊😊😊😊
நான் எங்கிட்ட மாட்டறவங்க ஆணோ பொண்ணோ அவுங்க மூக்கை ஒடச்சிட்டுத்தான் அப்பறமா அவுங்க பணம் பொருள் நகை நட்டைப் பறிப்பேன். அதனாலதான் என்னோட அடியாட்கள் எனக்கு மூக்குடைப்புங்கற பட்டத்தைக் குடுத்தாங்க.
😊😊😊😊
எஞ் செல்லம்டா முத்து. உனக்கு அஞ்சு வயசு ஆகறபோது உங்கப்பனையும் உங்கம்மாளையும் உங்கப்பங்கிட்ட பயிற்சி எடுத்த ரவுடிங்களே நம்ம வீட்டு வாசல்ல குத்திக் கொன்னுட்டானுக. பாவிங்க. நாசாப்போக. அவுனுக தலைல இடி எறங்க. உங்கப்பன் உயிரைவிடறதுக்கு முன்னாடி எங்கிட்ட ஒரு சத்தியம் வாங்கிட்டான். ஆமாம்டா முத்து. நீ அஞ்சு வயிசிலேயே சின்னச் சின்ன ரவுடித்தனங்களப் பண்ணுவ. உன்ன மாவட்ட அளவில பெரிய ரவுடியாக்கணும்ங்கறது அவனோட கனவு. அத நிறைவேத்தான் அவுனுக்கு சத்தியம் பண்ணிக்குடுத்தேன். அதை நீயும் இருபத்தஞ்சு வயிசிலயே நீரூபிச்சுக் காட்டிட்டே.
😊😊😊😊😊
உங்க புண்ணியத்திலயும், ஆதரவிலும் நீ தந்த ஊக்கத்தில நம்ம கொசுமுட்டம் மாவட்டத்திலே நாந்தான் பிரபல ரவுடி மூக்குடைப்பு முத்து.
சரி பாட்டிம்மா. என்னோட மனைவி மாங்கனிக்குப் பையம் பொறந்து ஒரு வாரம் ஆகுது. இன்னும் அவுனுக்குப் பேரு வைக்கலயே. நீயே அவுனுக்கு ஒரு பேரு வச்சுடு பாட்டிம்மா.
😊😊😊😊😊
டேய் முத்து நீ மாவட்ட அளவில ரவுடி. உம் மவன் மாநில அளவில, இல்ல, இல்ல. நம்ம இந்திய அளவில பெரிய ரவுடியா வரணும். அவன் பிரபல ரவுடி ஆனதும் அவனோட இருப்பஞ்சாவது பொறந்த நாள 1000 ரவுடிங்களுக்கு மத்தில கொண்டாடணும். அத நான் எங் கண்ணால பாக்கணும். போன வாரம் எழுபத்தஞ்சு ரவுடிங்களுக்கு மத்தில பொறந்த நாளக் கொண்டாடின அந்த ரவுடி பேரு என்னடா முத்து? எனக்கு மறந்து.போச்சு.
😊😊😊😊
அவுரு பேரு பினு.
😊😊😊😊
ஆமாமாம். பினு தான். எஞ் செல்லக் கொள்ளுப் பேரனுக்குப் 'பினு' -ங்கற பேரையே வச்சிடலாம்.
😊😊😊😊
அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்னு தெரிலயே.
😊😊😊😊😊
என்ன அர்த்தமோ இருந்துட்டு போகட்டும்டா முத்து. நம்ம தமிழ் மக்கள்ல 99% பேரு பிள்ளைங்களுக்கு தமிழப் பேருங்கள வைக்கறதில்லை. அர்த்தம் தெரிஞ்ச, தெரியாத, அர்த்தமே இல்லாத பேருங்களத்தாம் வைக்கறாங்க. நமக்கு மட்டும் என்ன வந்துச்சு. எஞ் செல்லப் பேரனுக்குத் தமிழ்ப் பேர வச்சு நம்மளை நாமளே அசிங்கப்படுத்திக்கக் கூடாதுடா முத்து.
😊😊😊😊😊
சரி பாட்டிம்மா. நீ சொல்லறபடியே அர்த்தம் தெரியாத பிறமொழிப்.பேரையே உங்க கொள்ளுப் பேரனுக்கு வச்சு நம்மள நாமே கவுரவப்படுத்திப் பெருமைப்படலாம்.
😊😊😊😊😊
பினு. பினு. பினு. எஞ் செல்லப் பினு.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க. திரைத் தமிழை முடிந்தவரை தவிர்ப்போம்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Binu= அர்த்தம் இல்லாத பெயர்
Pinu=curly haired

எழுதியவர் : மலர் (11-Feb-18, 4:24 pm)
பார்வை : 297
மேலே