அப்பா

எழுதுகாேல்✏
பிடித்து நான் சிறுபிள்ளையாய் கிறுக்கியதை ஓவியம் 🌅என்றாய்....
இரண்டு வரிகள் எழுதியதை
கவிதை📝 என்றாய்.....
நான் அழைத்த அப்பா 👨‍👦என்ற சாெல்லின் காேடி இன்பம் காெண்டாய்...
காேபத்தில்😡 அடித்து
விட்டு எனக்கு ஐஸ்
வைக்க மிட்டாய்
வாங்கி🍫 வருவாய்.....
எனக்காென்று என்றால்
துடிதுடித்து பாேவாய்.....
என் பேச்சை கண்டு
வாயடைத்து போவாய்......
சின்னதாய் அடிப்பட்டாலும்
பதறி பாேவாய்....
அப்பாவின் மார்பில்
சிறுவயதில் படுத்து
உறங்கிய சுகம்....
என் கண்ணீல் நீர் கண்டால் உன் கண்ணீலும் நீர் வடியும்.....
நான் உறங்க நீ
கூறிய கதைகள்
இன்னும் என் மனதில் பசுமரத்தானியாய்......
உன் மேல் தண்ணீர்
தெளித்து விளையாடி
அடி வாங்கியதும் சுகம் தான் எனக்கு.....
மரத்தில் தூரி கட்டி
அப்பாவுடன் விளையாடியதும்
சுகம் தான் எனக்கு...
சிறுவயதில் அப்பாவுக்கு
தலைசீவி பாெட்டு வைத்து விளையாடிய தருணங்கள்....
அப்பாவுடன் சிறு மாலை
பயணம்.....
இரவில் உறங்கிய பிறகு
எனக்கு
முத்தமிட்டு
போர்வை பாேர்த்திவிடும் அப்பாவின் அன்பு......
எதற்கும் எல்லை இல்லாதது...

எழுதியவர் : சிந்துவைரமுத்து (12-Feb-18, 7:04 pm)
Tanglish : appa
பார்வை : 1730

மேலே