தூறட்டும் மழை

வருமானமீட்ட வக்கில்லை
வானத்திற்க்கும் என்மீது வஞ்சனை!
வாய்க்கரிசி விளைய
தூறட்டும் மழை..!

வியர்வை தோய்ந்த வெற்றுடலில்
இப்போது பிணத்தின் வாடை!
உடலைக் குளிப்பாட்ட
தூறட்டும் மழை..!

எரிப்போ? புதைப்போ?
எதுவென்று தெரியவில்லை!
கொள்ளிப்பானை நிரம்ப
தூறட்டும் மழை..!

சிவப்பு முழுமதி
என் மனையாளின் நெற்றியில்-அது
நிலைபெற தூறவில்லை...
அழிக்கவாவது தூறட்டும் மழை..!

என்னைப்போன்று
பல விவசாயிகள் கழுத்தும்
தூக்குக் கயிற்றில் தொங்காமல்
அவர்கள் உயிர்பெறவும்
தூறட்டும் இம்மழை..!

எழுதியவர் : யாழ்வேந்தன் (15-Feb-18, 9:01 am)
பார்வை : 789

மேலே