வாழ்வது சில காலம்
பணம் பொருள் செல்வம் எல்லாம்
பிணமானால் முடிந்து போகும்
எக்கணமும் மரணம் வரும்
எப்போதும் நம் நிலை மாறும்
துணைவியின் துணையுமில்லை
தோழரின் நட்புமில்லை
பிள்ளையின் அன்புமில்லை
பெற்றோரின் பரிவும் இல்லை
இறந்தால் எவரும் நமக்கில்லை
நம்வாழ்வில் செய்த நல்லவை தான்
எப்போதும் கூட நின்று அங்கே
எம்துயர் போக்கும் எம் நிலை காக்கும்
முடிந்தால் நன்மை செய்வோம்
முயன்றாலும் தீதைத் தவிர்ப்போம்
ஆக்கம்
அஷ்ரப் அலி