காதலித்துப்பார்

கண்ணுக்கு இமயமலை
சிறுதுரும்பாக எட்டும்
கொளுத்தும் வெயில்
பனித்துளியாக கொட்டும்

சூரியன் சந்திரனாகவும்
சந்திரன் சூரியனாகவும்
இரவு பகலாகவும்
பகல் இரவாகவும்மாறும்

பெற்ற தாய்தந்தையர்முகம்
சிலசமயம் மறைந்துபோகும்
நண்பர்களின் அறிவுரைகள்
உயிரற்று இறந்துபோகும்

உலகமெங்கும் இருள்சூழும்
உனக்குமட்டும் வெளிச்சமாகும்
உன்னவள்முகம் நிலவாகும்
அவள்புன்னகை மின்னும்நட்சத்திரமாகும்

குடிசையில் வாழ்ந்தாலும்
மாளிகையென்றே மனம்எண்ணும்
மாளிகையில் இருந்தாலும்
குடிசைக்கு செல்லத்தோன்றும்

நடைபாதையில் முட்கள்
வலியெனச்சொல்ல இல்லைவார்த்தைகள்
தனக்குத்தானே பேசிகொண்டு
தன்வீட்டையே மறப்பார்கள்

நினைத்ததுஒன்று
நடப்பதெல்லாம் வேறொன்று
காதல் பயணத்தில்
காதல்தான் வழிகாட்டி காதலித்துப்பார் !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (15-Feb-18, 12:30 pm)
Tanglish : kathalithuppar
பார்வை : 303

மேலே