சுமைகள்
கையில் படித்துப்பெற்ற
பட்டத்தின் காகிதங்கள்...
இளைஞர்க்கு
வேலையின்மைச் சுமை..!
இன்றைய தேவையும்
நாளைய சேமிப்பும் கேள்விக்குறி...
தலைவனுக்கு
வாழ்க்கையேச் சுமை..!
பாசத்தில் குடும்பமும்
நேசத்தில் மற்றொரு உறவும்
ஒரே மனதில் கனக்கிறது...
அன்பும்கூட ஒரு சுமை..!
காதல் விட்டுப்பிரிய
உடைந்த நெஞ்சுக்குள்
இன்னும் துடிக்கும் இதயம்...
அதன் ஓசையும் சுமை..!
தள்ளாடும் வயதில்
தள்ளிவைக்கும் உறவுகள்...
முதுமைபெற்ற உடல்கூட்டில்
உயிர்கூடச் சுமை..!
தீண்டாமையின் தீயில்
பொசுங்கிப்போகிறது மனிதம்...
சாதியே சமுதாயத்தின்
மிகப்பெரும் சுமை..!