​மரணம் பற்றிய தேடல்

​பிறந்தவர் எல்லாம்
இறப்பவர் ஒருநாள்
இயற்கையின் நியதி ​
​மறுப்பவர் எவருண்டோ ?​
​இன்பமமும் துன்பமும் ​
​இடையில் சந்திக்கும் ​
​நிகழ்வுகள் என்பதும்
​நிதர்சனம் வாழ்வினில் !

​விரக்தியும் கவலையும்
​தேங்கினால் நெஞ்சில் ​
​வருத்தம் வழிவதை
​தடுக்கவும் முடியுமோ ?
​வாடுதல் துவங்கி
​தேடுதல் தொடங்கும் ​
​மனிதனின் ​மனதும்
​மரணத்தை எண்ணியே !

வாழ்ந்து முடித்தவனும்
​வாழ்வை வெறுத்தவனும் ​
​வாயிலைப் பார்த்தே ​
​வரவேற்க காத்திருப்பான் ​...
​வருகின்ற மரணமும் ​
​வருத்திட வைக்காது
​வன்முறை இல்லாது
​அமைதியாய் நிகழுமென !​

​உள்ளமது அல்லாடும் ​
​குழப்பத்தில் தவித்திடும் ​
​உறங்காத விழிகளும்
உலர்ந்திடும் நிலையாகும்...
​நிரந்தரமாய் உறங்கிட ​
​நிம்மதியாய் மரணிக்க ​
​நேரமதுவும் விரைந்திட ​
​விட்டத்தை நோக்கிடும் !

நிலையானது அல்லவே ​
​மகிழ்ச்சியும் மனிதனுக்கு
​இன்னல்கள் குறுக்கிடும் ​
​உள்ளவரை மண்ணில்தான் ..​
​தேடுவதால் கிடைக்காது ​
​நிச்சயித்த மரணமும் ​
வந்திடும் எப்பொழுதும்
உறுதிதான் எவருக்கும் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (15-Feb-18, 10:22 pm)
பார்வை : 2520

மேலே