பட்டாம்பூச்சி
வண்ண வண்ண சிறகை விரித்து
எண்ணம் அழகாய் மாற்றிடுமே
சின்னச் சின்ன செடியில் அமர்ந்து
தேனை மயங்கி உண்டிடுமே
மெல்லிய உடலை காற்றில் சுமந்து
அழகாய் அழகு காட்டிடுமே
துள்ளும் சிறுவர் மனதை மயக்கி
இல்லம் சிரிக்க தூண்டிடுமே
மழையின் வேளை இலையின் மறைவில்
அமர்ந்து ஓய்வு எடுத்திடுமே
கிளையின் ஆட்டம் தண்ணீர் தெளிக்க
சுகமாய் குளியல் முடித்திடுமே
பிடிக்கத் துடிக்கும் மழலை முன்னே
எடுக்கும் ஓட்டம் பதறித்தான்
கடிக்கத் துடிக்கும் வண்டைக் கண்டே
ஒளியும் பாவம் பயந்துதான்
பட் பட்டெனவே பறக்கும் பூச்சு
பட்டாம் பூச்சி ஆனதோ
சட் சட்டெனவே அருகில் வர
சட்டம் போட்டால் நல்லதே
புழுவாய் இருந்து சிறகு கிடைக்க
வானம் முழுதும் அளந்திடும்
எழுவாய் தம்பி நீயும் பறப்பாய்
லட்சியம் அடைய உழைத்திடு