புதிய தலைமுறையும் , பெண்ணியமும்

தொப்புள் உறவை தாண்டி இன்னொரு இறுக்கமான கையறு தேவைப்படுகிறது அவ்வப்போது. இந்த தேவைக்கு காரணம் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு வெற்றிடம்.
இந்த வெற்றிடம் தான் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய தொய்வு நிலை.

ஒரு பருவத்தில் நாம் நம்மை சுற்றியுள்ள களிப்பில் நாம் துலைந்து விடுகிறோம்.
அந்த பருவத்தில் நாம் குழந்தை நிலையை கடந்தும் இன்னும் குழந்தையாய் கடக்கிறோம்.

இன்னொரு பருவத்தில் எந்த இலக்கும் இல்லாமல் ஒரு புழுவை போல நெழிகிறோம்.
நம் அன்னை, தந்தைக்கு பயந்து வாழ்க்கையில் பதுங்குகிறோம். இந்த பதுங்குதல் தான் வாழ்க்கையில் நாம் கையாளும் ஒரு பெரிய சோம்பலின் உச்சம். இந்த உச்சத்தில் நிலைத்தவர்கள் நம் நாட்டில் புரையோடி பரவியிருக்கிறார்கள்.

இந்த நிலை தான் தேக்க நிலை, நம் செயல்பாடுகள் செயலற்று போய்விடுகிறது.
"நாம் ஒரு துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட ஒரு வெள்ளை தோட்ட , நாம் மட்டுமே துளைக்க கூடிய இலக்கை நோக்கிய பயணம் இது."

இந்த உணர்ச்சி கிளை நம் மனதில் விரிவதில்லை. குவிந்து ஒடுங்கி , எதாவது ஒரு பாதையை தேர்வு செய்து பயணிக்க முற்படுகிறோம்.

காலங்களும் மாறிக்கொண்டே இருக்கிறது நாம் எந்த கோணத்தில் இருக்கிறோம் என்பது நமக்கு தெரிவதில்லை. அப்போது தான் மிகப்பெரிய ஒரு வெற்றிடத்தில் தேங்குகிறோம்.

அப்போது நாம் நம் பெற்றோரிடம் இருந்து வெகுதொலைவில் பயணித்து விடுகிறோம்.
நம்முடைய நிலை என்ன என்ற புறிதலை அவர்களுக்கு விளக்க நாம் நெருக்கமாக பயணிப்பதில்லை. ஆம் அந்த இடைவெளி நமுக்கு தேவையாகிறது. அப்போது அந்த இடைவெளியில் நம் வெறுமை பயணிக்கிறது.

இப்பொது நாம் ஒரு யாருமற்ற தனிமையில் பயணிப்பது போன்று நிலை ஏற்படும்.
பாலைவனித்தில் இரவு பயணம் போல இருக்கும்.

இப்போதான் ஒரு விசை தேவைப்படுகிறது

ஆங்கிலத்தில் இதை டிரைவிங் போர்ஸ் என்று கூறுவார்கள்.

அப்போது அந்த சக்தி ஒரு இளைஞனுக்கு ஒரு பெண்ணாகத்தான் இருக்கு முடியும்.

பெண்கள் ஒரு மாபெரும் சக்தி

"வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே!"

என்ற பாரதிதாசன் தமிழுக்கு தெரிந்த இந்த பெண் விசை இன்னும் நம்மை தீண்டவில்லையா?

இந்த மாபெரும் இயக்க ஆற்றல் ஒரு புதிய விதியை படைக்கிறது.

ஒரு கரு தனித்து செயல் படுவதில்லை , இணைவுதான் பலமாற்றங்களை செய்முறை படுத்துகிறது.

இணைவு செயல் தான் "காதல்" என்ற பெயர் சுமந்து ஜனிக்கிறது.

ஒரு precipitation என்று ஆங்கிலத்தில் கூறப்படும் ஒரு வீழ்படிவாக்கல் அமைகிறது.

காதல் இங்கு உடல் மொழி பேசுவதில்லை, அகமொழி பரிமாறுகிறது.

இந்த காதல் ஒரு இளஞ்சனை உற்சாகமான நிலைக்கு தள்ளுகிறது.
ஒரு வெற்றிடம் நிரம்புகிறது. அவனுடைய குறிக்கோள் பாதை தெளிவாகிறது. உரக்க சிந்தனை வளர்கிறது.

காதல் ஒரு கடவுளை இந்த பூமிக்கு உருவாக்கி கொடுக்கிறது.
காதல் விசை ஒரு பெண்ணிடத்தில் தான் வரும் என்றால் ஏன் அந்த ஈர்ப்பு பெரும்பாலும் நம் அன்னையிடம் ஏன் வருவதில்லை என்ற ஒரு கேள்வி வருகிறது.

ஒரு அன்னை தன் பிள்ளைக்கு வழி காட்டுவாள் ஆனால் உடன் பயணிப்பதில்லை.
ஆனால் ஒரு காதல் வழி மட்டும் அல்ல வழியில் ஏற்படும் வலிக்கும் தீர்வு கொடுப்பதாக அமைகிறது.

ஒரு பெண்ணை காதலித்தால் தான் முடியுமா , ஒரு பெண்ணை நட்பாக்கி கொண்டால் முடியாத என்றால்.

நட்ப்பிலும் , காதலிலும் மையம் கொண்டிருக்கும் புயல் ஒன்று தான் அதை திசை மாற்றுவது அவர் அவர் மனப்பக்குவம் .

காதலித்தால் அதை திருமணத்தில் நிறுத்தி பார்ப்பது நம் அழிய , அறிவில்லா குணம்.

உடைத்து எறியுங்கள் இந்த முரண்பாட்டு கருத்தை.

காதலித்து பாருங்கள், உங்கள் திசை தெரியும்.

சாய்ந்து கொள்ள ஒரு தோள் போதும். இந்த உலகம் பல சரித்திரங்களை தாங்காது.

இல்லாத ஒன்றை தேடி அலையும் மனித இனம் இது. இருக்கின்றவற்றை முகர தெரியாது.

ஆட்சி கட்டிலில் இந்த சூத்திரம் தெரிந்திருந்தல் எப்போதோ எட்டியிறுக்கலாம் நம் சிகரத்தை.

உடலியலை சரியாக நாம் புரிந்துகொள்ளவில்லை என்பதற்கு , இன்னமும் அரங்கேறி கொண்டிருக்கும் வன்கலவிகள்.

பெண்ணை பற்றிய புரிதலில் பல தலைமுறைகள் தோல்வியை தழுவியது .
காரணம் காதலை பற்றிய மாற்று சிந்தனைகள்.

இந்த காதல் மட்டும் தானே ஒரு உணர்வற்று போயிருந்த சிந்தனையை கீறிய கதம்பம் .

பயிற்றுவிடுங்கள் இனி வரும் இளைய தலைமுறைக்கு பெண்ணியம் பற்றி.

இந்த காந்தவியல் இன்னும் பல தலைமுறைகளை வசீகரிக்கட்டும்.

எழுதியவர் : (18-Feb-18, 3:11 pm)
சேர்த்தது : sanmadhu
பார்வை : 191

சிறந்த கட்டுரைகள்

மேலே