ஹைக்கூசென்ரியு

புறக்கணிக்கப்பட்டு
புறந்தள்ளப்படுகிறது
பழுத்த இலைகள்...!

ஏங்கிக் கருகுகிறது
பச்சை மரங்கள்
வேர்களில் நீரில்லை…!

ஆற்றில் வெள்ளம்
காண ஏங்கும்
மேம்பாலங்கள்...!

பாய்ந்து ஓடுகிறது
தமிழக ஆறுகளில்
மணல் லாரிகள்...!

கருகுகிறது புகையால்
அடுப்புச் சுவர்கள்
பின் அடுக்களை சுவர்களும்...!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (19-Feb-18, 2:34 pm)
பார்வை : 302

மேலே