அவள் ஒரு அதிசய பூ

நான் மோப்ப
குழையாத புத்துயிர்
பெறும் புது அனிச்சம் நீ

முன்னிரவில் பூத்து
விடியலில் உதிரும்
சேடலைப்போல்
உன் கன்னி வாசத்தை
விடியும் வரையில்
என் மீது பொழிந்தாய்

நீ ஆம்பலாக நான் இரவாக
உன் மலர்ந்த இதழ்களால்
எனக்கு பாய் விரித்து
வாசமழை பொழிகிறாய்
நான் திளைத்ததும்
மீண்டும் குவிந்துக்கொள்கிறாய்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (23-Feb-18, 9:36 am)
பார்வை : 1275

மேலே