இன்னும் போவேன்

கரைந்து போகும்
இரவின் தொலைவுகளில்
நில்லாமல் போகிறேன்
நகரம் நீங்கி.
காடுகள் காண வேண்டி
அழுக்கு பூமியின்
குற்றவுணர்வு இன்னும்
என்னுள் உள்ளது.
நெருப்பும் நீரும்
சாகத் தொடங்கியபின்
வெறுமை கவ்வ
விழிநீர் பெருக்கி
நில்லாமல் போகிறேன்.
தாவரங்கள் என்மீது
இச்சை கொள்ளட்டும்.

எழுதியவர் : ஸ்பரிசன் (26-Feb-18, 9:09 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : innum poven
பார்வை : 181

மேலே