தமிழ்ப் பாண்டியனால் இலங்கை சிங்களமானது

தமிழ்ப் பாண்டியனால் இலங்கை சிங்களமானது

(ஆசிரியப்பா)

தொன்மை இலங்கைத் தென்பாண்டிச் சொந்தம்
தென்பாண்டி ஆரியப் படையழித்து வென்றான்
தென்னவன் நெடுஞ்செழிப் பாண்டிப் புகழ்கேள்
பண்டையில் இமயந் தாண்டிச் சென்றான்
அவருடை நாடே அவர்தமிழ் இலங்கை
அவ்வா றாயின் சிங்களர் அவ்விடம்
எவ்வாறு வந்துச் சிறந்தார் அவ்விடம்
முன்னம் அராபியரைச் சென்றழித் ததமிழர்
பின்அவர் சிங்களரை ஏன்ஆ ளவிட்டார்
தென்னவப் பாண்டியன் வடசின் ஹளத்தில்
முன்னம் புத்தன் சனித்தான் அங்கே
என்றுத் தெரிந்து சென்றனன் சின்ஹளம்
அங்குத் தங்கமாய் உபசரித் தாராம்
தென்னவன் முன்மணம் புரிந்தவன்
தென்னவ னுக்குக் குழவியில் லையாமே

பனம்நுங் குமேனிப் பனிமலை யழகி
சிங்கள இளவரசி சிருங்கா ரஅழகி
தென்னவன் அவளைக் கண்டுடன் மோகிக்க
மன்னன் மகளும் மனமிசைவுத் தந்தாள்
தென்னவன் மழலை இலாதான் என்று
சின்ஹளன் பெண்தர மறுத்தான் ஆயினும்
தென்தீ வுச்சீ தனம்தரச் சொன்னான்
தென்னவன் அன்றேப் பட்டயம் செய்திடத்
சிங்கள வதுவைக்குத் தங்கநாண் இட்டான்
சின்ஹளக் காரிகையும் ஈன்றிடா நிலையில்
இலங்கை இல்லாப் போனது
இலங்கையிப் படித்தான் சிங்கள மானதுவே

ராஜப்பழம் நீ

(27.2.2018)
(இது ஒரு கர்ணபரம்பரைச் செய்தி யாம்.)

எழுதியவர் : பழனி ராஜன் (27-Feb-18, 9:39 am)
பார்வை : 127

மேலே