கற்பனை ஓவியம்

எத்திசை நோக்கின் நின்
முகம் கண்டேன்!
யென் கற்பனை ஓவியம் கண்முன்னே
உலாவக் கண்டேன்!
யென் சிந்தை யெலாம் பரந்து
விரிந்தோடும் நதி நீயெனக் கண்டேன்!

என்று தீரும் யென் ஐயம்!-இது
கார்முகில் கூந்தல் அலங்கரித்த
மலைமகளோ! - இல்லை
நீல வானிலே உலா வரும்
பிறைமக ளென்று!

நின்னைப் படைத்தவன்- ஓர்
விந்தைக் காரன் இல்லையேல்
யென்னைப் பித்தனாக்கி- உன்
பின்னே அலைய விட்டிருப்பானோ!

உதிரம் சிந்தாமல் கூரிடாமல்
இதயத்தை களவாடிச் செல்லும்
என்னோ விந்தையடி- உன்
கண்களுக்கு!

கவி மறைந்தான் இயற்கைப்
பேரழகி மாண்டதால் - இங்கே
நான் மாண்டுறுகிறேன் நொடியெல்லாம்
நின்னிடத்தில் காதலை உரைக்க முடியாமல்!

எழுதியவர் : ச. செந்தில் குமார் (2-Mar-18, 8:25 am)
Tanglish : karpanai oviyam
பார்வை : 462

மேலே