கலங்கரை காதல்

இங்கு வீசும் ஈரம் படிந்த
உப்புக்காற்றிலும் உன்
சுவாசம் தேடியலைகிறேன்..

கடற்கரை எங்கும் உன் பாத
சுவடுகளை தேடியலைகிறேன்..

இந்த ஆர்பரிக்கும் கடலலையின்
சப்தத்திலும் நான்
உன் மொளனத்ததை
தேடியலைகிறேன்..

அலைகள் கரையில் விட்டு
செல்லும் கிளிஞ்சல்கள் போல்
நீ என்னில் விட்டு சென்ற
நினைவுகளை தேடியலைகிறேன்..

கரைசேர கலங்கரையை தேடும்
கப்பல் போல்..
நான் உன் உயிர் சேர
உந்தன் இதயம் தேடியலைகிறேன்..!

தொலைத்த ஒன்று
கிடைக்காது என தெரிந்தும்
தேடி அலையும் கிறுக்கன் நான்..
உன் மீது மட்டும் என் அன்பு
முழுவதையும் கொட்டி தீர்த்த
காதல் கிறுக்கன் தான்..!

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (4-Mar-18, 9:15 pm)
Tanglish : kalangarai kaadhal
பார்வை : 408

மேலே