நானும் என் தங்கையும்
ஒரு தாய் வயிற்றில் பூத்த
பல பூக்களில் ஒரு பூ அவள்
என் உயிர்துடிப்பு
என் உடன்பிறப்பு
நான் கேட்காமல் கிடைத்த வரம் அவள்
என் உயிரவள்
மூன்றெழுத்து கவிதை கேட்டால்
முதலில் சொல்வேன் தங்கை என்று......
சோகங்கள் பலநுாறு எனக்குள் இருந்தாலும்
தினந்தோறும் சிரிக்கின்றேன்,
அவள் பூ முகம் பார்த்து
அவள் குரல் கேட்டு தண்ணீரால் அழித்தாலும்
அழிந்திடுமோ எம் உறவு
கண்ணீரால் அழித்தாலும் கரைந்திடுமோ அவள் நினைவு
என்னோடு துணை நிற்பாள்
என் தாய்க்கும் தாய் அவள்
என் தங்கை எனும் அவள்
என் வாழ்க்கைக்கு வழி காட்டியவள்
நான் வாடிபோக நீர் ஊற்றியவள் நான்
பார்த்த சில முகங்கள்
பாதை மாறிப் போனாலும்
பாசங்கொண்ட அவள் முகம் என்
இதயம் பூராய் பூத்திருக்கும்
அவள் அன்பை போல
நான் கொண்ட பாசம் சொல்ல
இப் பூமியிலே வார்த்தையில்லை ஆதலால் கண்ணீர்
துளியை தூது விட்டேன்
அவள் விருப்பத்தோடு
என் தோழி வழி கிடைத்த முத்து
என் மீது அப்பளுக்கற்ற பாசம் காட்டும் சொத்து
நான் சிரிக்க அவள் சிந்திடுவாள்
குறும்பு சில செய்து என் குழந்தை ஆகிடுவாள்
குழப்பம் நான் கொண்டால்
எனக்கு ஊக்கம் அளித்திடுவாள்
என் மனத் தோட்டத்தில் பூத்த பாசமலர்
உன் அன்பால் என்றும் நான் வாடாமலர்
என்றுமே
கௌசி