பெண்மைக்கு சுதந்திரம்

சுதந்திரம் கிடைத்ததாம் சுதந்திரம் !
பெண்மை முன்னேற விடாத சம்ரதாய சுதந்திரம்!!

சுதந்திரம் கிடைத்ததாம் சுதந்திரம்!
ஆணின் செருக்கிற்கு அடிமைப்பட்டே வாழ்கின்ற சுதந்திரம்!!

சுதந்திரம் கிடைத்ததாம் சுதந்திரம் !
வன்கொடுமைக்கு தீயில் மாழும் சுதந்திரம்!!

சுதந்திரம் கிடைத்ததாம் சுதந்திரம் !
பாலியல் கொலையால் பாதாளம் போன சுதந்திரம்!!

சுதந்திரம் கிடைத்ததாம் சுதந்திரம் !
தாங்கள் சரியென்று
ஒப்புக்கு ஒப்புக்கொள்ளும் போது ...
நாங்கள் செய்யும் செயல்கள்
சரி என்று சொல்லும்
ஒப்புக்கு சுதந்திரம்!!

வெள்ளையன் வெளியேறி வெகுகாலம் ஆகிவிட்டது!!!

யாரும் தருவது சுதந்திரம் அல்ல!
தானாய் மிளிர்வதுதான் சுதந்திரம்!!
வெளிவரட்டும் பெண்மையின் சுயமரியாதை!!!

(குறிப்பு: யாரையும் குறிப்பிட்டு எழுத்தவில்லை)

எழுதியவர் : எம் அம்மு (7-Mar-18, 6:51 pm)
சேர்த்தது : எம் அம்மு
பார்வை : 163

மேலே