பள்ளி நிலா வானம் --- முஹம்மத் ஸர்பான்

பனியோடு யுத்தம்
அதிகாலை சத்தம்
நிலவோடு லஞ்சம்
கனவோடு தஞ்சம்
முகிலின் பிள்ளை
நந்தவனக் கிள்ளை
ஈருருளிப் பயணம்
ஒற்றையடி பாதை
வெண்புறா சட்டை
புழுதியின் குட்டை
வெள்ளிநதி காற்று
குளத்துமீன் ஊற்று
மூங்கிலின் பாட்டு
பூங்காவில் கேட்டு
பைகளிலுள் பாடம்
கைகளிலுள் தேர்வு
ஜடையிடம் காதல்
மீசைமுள் மோதல்
குறிஞ்சிப்பூ மேகம்
கன்னிப்பரு தாகம்
அலையாக இன்பம்
துமி போல துன்பம்
பள்ளியறை ஏங்கும்
எங்கள் கதை பேசும்
ஓடிப்போன வருடம்
புளிமாங்காய் தின்று
கடந்து ஓடும் வயது
வலிப் பூங்கா ஆகும்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (7-Mar-18, 5:50 pm)
பார்வை : 159

மேலே