சிங்காரப் பைங்கிளியே

சிங்காரப் பைங்கிளியே அசைந்சைந்து வாராய்!
***செவ்வலகால் கொத்தியொரு சீட்டெடுத்துத் தாராய்!
இங்கிதமாய் நற்சேதி எனக்கின்று வந்தால்
***இதயத்தில் அன்பொழுக நெல்மணிகள் தருவேன்!
செங்கனிவாய் யெழில்கண்டு வடித்திடுவேன் பாட்டு
***சிந்தையெலாம் இனித்திடுமுன் கொஞ்சுமொழி கேட்டு!
தங்கத்தில் இருந்தாலும் கூண்டுனக்குச் சிறைதான்
***தட்டியதைத் திறந்திடுவேன் பறந்தோடு வாயே!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (10-Mar-18, 12:55 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 67

மேலே