அன்பை அழிக்கும் ஆயுதம் ஏது
அடேய், கடவுளே உன்னால் என் அக்காவை என் கூட இருக்க விடாமல் மட்டும் தான் டா செய்ய முடியும்.
அந்த நினைவுகளை உன்னால் அழிக்க முடியாது டா.
அப்படி நீ அந்த நினைவுகளை அழிக்க வேண்டும் என்றால் என் ஆன்மாவை அழிக்க வேண்டும்....
என் ஆன்மாவை அழிப்பதும் அவ்வளவு எளிதல்ல டா...
ஏனெனில் என் ஆன்மா கொண்ட அன்பை நீ அழித்தால் தான் என் ஆன்மாவை அழிக்க முடியும்...
முடியுமா உன்னால்?
அன்பை அழிக்கும் சக்தி உன்னிடம் உள்ளதா?
எங்கே காட்டு பார்த்திடலாம் அதையும்?
பயம் என்கிட்ட இல்ல.
உனக்கு சவால் விடும் சக்தி என் அன்புக்கு உண்டு டா.
நீ மனிதர்களை தீர்மானிக்கிறாய்...
அவர்கள் மூலம் என் அன்பை சந்தேகித்து மகிழ்கிறாய்...
அதன் வழியில் என்னை நீ வெற்றி கொள்ள பார்க்கிறாய்...
என்ன வாழ்க்கை டா இதுவென்று தனக்கு தானே வெறுப்பைத் தூண்டுகிறாய்...
சளைத்தவன் அல்ல நான்...
அன்பு யுத்தத்திற்கு தயாராகிவிட்டேன்...
முடிந்தால் வா...
உன்னால் முடிந்ததை செய்யடா...
என் பெயர் சிவா டா...
அன்பே சிவம் டா...
எதிர்ப்பவன் எவனடா.
ஆயுதம் கொண்டென்ன? எதைக்கொண்டு வந்த போதும்,
அன்பு ஒன்றே போதும்...
அனைத்திற்கும் தொடக்கம்...
அனைத்திற்கும் முடிவு...
கண்டுபிடி நீ யார்?
நான் யார்?
எங்கு சுற்றி எங்கே வந்தாலும் அங்கேயே முடியுது...
அன்பே ஒன்றே அனைத்தையும் தன் வசமாக்கும்....