பாடல்

உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தின்
"நஞ்சை உண்டு புஞ்சை உண்டு"
என்ற பாடலின் ராகத்திற்கு
நான் எழுதிய வரிகள்



நீதி உண்டு
நியாயம் உண்டு
நேர்மை உண்டு
தர்மம் உண்டு
பாரதத்தில் பேச்சுக்கெல்லாம்
பஞ்சமில்லை-ஆனா
நேரத்திற்கு தான்எதும் வந்ததில்லை
மதம் கொண்டு
சாதி கொண்டு
பிரிவினை இங்கு உண்டு
வஞ்சத்திற்குலாம் இங்கு
பஞ்சமில்லை-ஆனா
ஒத்துமைக்குதான் சிறு
வழியுமில்லை

ஒன்னா வாழ்வோம் வாடா
எந்தன் தோழா
இனிவேணா சண்டை
நம்முள் வீணா...
எதிர்காலம் நாமே
உணர் தோழா
கலிகாலம் நீங்க
உழை தோழா

நீதி உண்டு
நியாயம் உண்டு
நேர்மை உண்டு
தர்மம் உண்டு
பாரதத்தில் பேச்சுக்கெல்லாம்
பஞ்சமில்லை-ஆனா
நேரத்திற்கு தான்எதும் வந்ததில்லை

கிணற்றின் அளவிலே
பணத்தை அடித்தவன்
எளிதாய் தப்பிச்செல்ல
முடியுது
குடத்தின் அளவிலே
கடனை பெறுபவன்
குலமே மூழ்கி
இங்கு அழியுது

மடமையாக...வாழ்ந்தது போதும்
மாற்றங்கள் வேண்டும்
விழித்தெழு
அடிமையாக...போனது போதும்
நமக்கு நாமே
தோள்கொடு

பூக்களே பூக்களாய் பூக்கட்டும்
வானமோ நீலமாய் இருக்கட்டும்
கலப்படம் எல்லாம் கழியட்டும்
ஊழல் மலிவுகள் மடியட்டும்
அரசு இயலும் அரசியலும்
அறத்தின் வழியே நடக்கட்டும்


நீதி உண்டு
நியாயம் உண்டு
நேர்மை உண்டு
தர்மம் உண்டு
பாரதத்தில் பேச்சுக்கெல்லாம்
பஞ்சமில்லை-ஆனா
நேரத்திற்கு தான்எதும் வந்ததில்லை
மதம் கொண்டு
சாதி கொண்டு
பிரிவினை இங்கு உண்டு
வஞ்சத்திற்குலாம் இங்கு
பஞ்சமில்லை-ஆனா
ஒத்துமைக்குதான் சிறு
வழியுமில்லை

-அ.ஜீசஸ் பிரபாகரன்

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (10-Mar-18, 6:39 pm)
Tanglish : paadal
பார்வை : 150

மேலே